இனிமேல் பொது இடத்தில் எச்சில் துப்பினால் 1,200 ரூபாய் அபராதம்!

இனிமேல் பொது இடத்தில் எச்சில் துப்புபவர்களுக்கு 1200 ரூபாய் அபராதமாக வசூலிக்க மும்பை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாம்.

மும்பை மாநகராட்சியில் ஏற்கனவே பொது இடங்களில் அசுத்தம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன், 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டும் வருகிறது. இந்நிலையில் இந்த அபராத தொகையை 1200 ஆக அதிகரிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ள நிலையில் இது குறித்து கமிஷனர் இக்பால் அண்மையில் ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது. எனவே இனிமேல் மும்பை மாநகராட்சியில் பொது இடங்களில் அசுத்தம் செய்பவர்கள் மீது 1200 ரூபாய் அபராதமும் வசூலிக்கப்படும் என கூறப்படுகிறது.

இருப்பினும் இந்தத் திட்டத்திற்கு மாநகராட்சி பொது குழு ஒப்புதல் அளிக்க வேண்டும். அவ்வாறு அதிகாரப்பூர்வமாக அளித்தால் இனிமேல் பொது இடங்களில் அத்து மீறுபவர்கள் மீது ஆயிரத்து இருநூறு ரூபாய் அபராதமாக விதிக்கப்படும் என கூறப்படுகிறது. ஏற்கனவே இதுவரை மும்பை மாநகராட்சியில் பொது இடங்களில் எச்சில் துப்பியவர்கள் மீது 200 ரூபாய் வசூலித்ததில் கடந்த 6 மாதத்தில் மட்டும் 48 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாம்.

author avatar
Rebekal