சூப்பர் மேன் போன்று பறக்க முயன்ற 12 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு…!

Death

நொய்டாவின் பார்த்தாலா கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவர் தான் சூப்பர்மேன் போல ஸ்டண்ட் செய்து சமூகவலைதளத்தில் வெளியிடுவதற்காக முயற்சித்த போது கழுத்து நெறிப்பட்டு உயிரிழப்பு.

நொய்டாவின் பார்த்தாலா கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவர் தான் சூப்பர்மேன் போல ஸ்டண்ட் செய்து சமூகவலைதளத்தில் வெளியிடுவதற்காக முயற்சித்த போது கழுத்து நெறிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தின் போது அவருடன் நான்கு தங்கைகள் இருந்த நிலையில் அவர்களில் ஒருவர் அத்தருணத்தை படம் பிடிப்பதற்காக கேமராவை ரெடியாக வைத்து இருந்துள்ளார்.

இதனையடுத்து, உயிரிழந்த சிறுவன் சுர்ஜித் காமிக் சூப்பர் ஹீரோவை பின்பற்றுவதற்கு அவரது கழுத்தில் கேப் போன்ற துணியை கட்டினார். அவர் மரப்பெட்டியில் இருந்து குதித்தபோது பெட்டின் ஓரத்தில் துணி சிக்கியதால் அவரது கழுத்து நெறி பட்டது. இந்த சம்பவம் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது அதில் பதிவாகியுள்ளது. இதனை அடுத்து அவருடன் இருந்த சகோதரிகள் சத்தமிட அவரது தாயார் வீட்டில் இருந்து விரைந்து வந்து சுஜித்தை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here