மதுரை அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலால் 12பேர் உயிரிழப்பு …!மருத்துவமனை டீன் தகவல்

மதுரை அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலால் இதுவரை 12பேர் உயிரிழந்துள்ளனர் என்று மதுரை அரசு மருத்துவமனை டீன் மருதுபாண்டியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  மதுரை அரசு மருத்துவமனை டீன் மருதுபாண்டியன்  கூறுகையில், மதுரை அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலால் இதுவரை 12பேர் உயிரிழந்துள்ளனர்.அதேபோல் இறந்தவரின் உடலை வழங்க பட்டாசு வாங்கி வரும்படி கூறிய ஊழியர்களிடம் விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. 3 பேராசிரியர்கள் கொண்ட குழு விசாரித்த பின்னர் ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பாரும் என்றும் மதுரை அரசு மருத்துவமனை டீன் மருதுபாண்டியன் தெரிவித்துள்ளார்.