29 C
Chennai
Wednesday, June 7, 2023

கடந்த 4 ஆண்டுகளாக ரோஹித் ஷர்மா சிறப்பாக ஆடியுள்ளார்…விராட் கோலி புகழாரம்.!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்று லண்டன் ஓவல்...

3 ஆண்டுகளில் 12 கொலை…நண்பர்களுக்கு ‘சயனைடு’ கொடுத்த பெண் அதிரடி கைது.!!

சயனைடு பயன்படுத்தி தனது நண்பர்கள் 12 பேரை கொன்றதாக 32 வயது பெண்ணை தாய்லாந்து போலீசார் கைது செய்துள்ளனர்.

தாய்லாந்தின் பாங்காக் எனும் நகரில் வசித்து வந்தவர் சிரிபான் கான்வாங். கடந்த 14ம் தேதி சிரிபான் கான்வாங் சுற்றுலாவுக்காக தன் தோழி சாராரத் என்பவருடன் ரட்சாபுரி மாகாணத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு இருந்த ஆற்றங்கரைக்கு இருவரும் சென்ற நிலையில், திடீரென சிரிபான் கான்வாங் மயங்கி கீழே விழுந்துள்ளார்.

பிறகு அவரிடம் இருந்த பணம் மற்றும் செல்போன் உள்ளிட்டவை காணாமல் போன தாக கூறப்படுகிறது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றால் காவல்துறையினர் சிரிபான் கான்வாங்கை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகவும், அவருடைய உடலில் சயனைடு  விஷம் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனால், சிரிபான் கான்வாங் தோழி  சாராரத் மீது சந்தேகம் அடைந்த காவல்துறையினர், அவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடந்தினார்கள். விசாரணையில் ” 12 பேரை சயனைடு கொடுத்து அவர் கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலைகளை அவர் கடந்த 3 ஆண்டுகளாக செய்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

சாராரத் கொலை செய்த அனைவரும் சுமார் 33 வயது முதல் 44 வயது வரை இருப்பவர்கள் எனவும், இவர்களிடம் இருந்து பணம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை திருடுவதற்காக இந்த கொலைகளை அவர் செய்துள்ளதாக விசாரணை நடத்திய காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.