தண்ணீர் பாய்ச்ச சென்றபோது 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு.! அலறி அடித்து ஓடிய பெண்மணி.!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே விவசாய நிலத்தில் புகுந்த 12 அடி

By balakaliyamoorthy | Published: Feb 01, 2020 09:54 AM

  • கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே விவசாய நிலத்தில் புகுந்த 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பார்த்து அலறி அடித்து ஓடிய பெண்மணி.
  • பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அனுப்பி, விரைந்து வந்த தீயணைப்பு அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் உதவியுடன் மலைப்பாம்பை பாதுகாப்பாக பிடித்து காட்டு பகுதியில் விட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்து சத்திரப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் கண்மணி என்ற பெண்மணி. இவருக்கு 4 ஏக்கரில் விவசாய நிலம் இருக்கிறது. எனினும் நிலத்தின் நடுவே மண்திட்டான பகுதியில் உள்ள பாறையின் நடுவே கடந்த 10 நாட்களுக்கு முன் சுமார் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு புகுந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்மணி அவரது விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். அப்போது திடீரென அந்த மலைப்பாம்பு மேல வந்ததால் அந்த பெண்மணி பார்த்துவிட்டு அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளார். இந்நிலையில், அந்த பெண்மணி உறவினர்களிடம் கூறி, பின்னர் ஊத்தங்கரை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறை அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் உதவியுடன் சுமார் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின்னர் அந்த மலைப்பாம்பை பாதுகாப்புடன் பிடித்து அருகிலுள்ள ஒன்னங்கரை காட்டு பகுதியில் விட்டனர். இந்த சம்பவத்தால் அங்குள்ள மக்கள் தங்களது விவசாய நிலத்திற்கு செல்வது பயத்தை உண்டாக்கியுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc