11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு.! 90.93% பேர் தேர்ச்சி…!!

சற்றுமுன் 11ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது.

11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணி அளவில் வெளியானது. தமிழ்நாட்டில் இன்று வெளியான 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் 90.93% பேர் தேர்ச்சி பெற்றுள்னர்.

மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தெரிந்துக் கொள்ளலாம். இதுதவிர, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும், அனைத்து நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளைப் பார்த்துக் கொள்ளலாம்.

11ஆம் வகுப்பு தேர்வினை 7,76,844 பேர் எழுதிய நிலையில் 7,06,413 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இதில், மாணவியர் 94.36 சதவீதமும் மாணவர்கள் 86.99 சதவீதமும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். மாணவர்களை விட மாணவியர் 7.37 சதவீதம் அதிகம் பெற்றிருக்கின்றனர்.

11ஆம் வகுப்பு தேர்வில் கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 90.07 சதவீதமாக இருந்த நிலையில் இந்த ஆண்டு 90.93 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.