தமிழ்நாட்டில் 10- பொதுத்தேர்வு முடிவுகளை தொடர்ந்து 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியானது.
தமிழ்நாட்டில் மார்ச் 14 முதல் ஏப்ரல் 5-ஆம் தேதி வரை நடைபெற்ற 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 7.73 லட்சம் பேர் எழுதினர். இந்த நிலையில், 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.93% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்ச்சி விகிதம்:
அதன்படி, பொதுத்தேர்வு எழுதிய 7,76,844 மாணவ, மாணவிகளில் 7,06,413 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில், 3,91,968 மாணவர்கள், 3,14,444 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களைவிட மாணவிகள் 7.37% பேர் அதிக தேர்ச்சி பெற்றனர். எனவே, மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தெரிந்துக் கொள்ளலாம்.
நூற்றுக்கு நுறு மதிப்பெண்:
தமிழ் – 9, ஆங்கிலம் -13, இயற்பியல் – 440, வேதியியல் – 107, உயிரியல் – 65, கணிதம் – 17, தாவரவியல் -2, விலங்கியல் -34, கணினி அறிவியல் – 940, வணிகவியல் – 214, கணக்குப் பதிவியல் – 995, பொருளியியல் – 40, கணினிப் பயன்பாடுகள் – 598, வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் 132 பேர் என மொத்தம் 3,606 பேர் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்து அசத்தியுள்ளனர்.
முதல் 5 இடங்கள் பெற்ற மாவட்டங்கள்:
11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூர் மாவட்டம் 96.38 சதவீத தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்தது. ராணிப்பேட்டை மாவட்டம் 82.58% தேர்ச்சியுடன் கடைசி இடத்தில் உள்ளது. அதன்படி, திருப்பூர் – 96.38%, ஈரோடு – 96.18%, கோவை – 95.73%, நாமக்கல் – 95.60%, தூத்துக்குடி – 95.43% ஆகிய மாவட்டங்கள் முதல் 5 இடத்தில் உள்ளன.
அரசு பள்ளி தேர்ச்சி விகிதம்:
11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் அரசுப் பள்ளிகளில் 84.97% பேரும், தனியார் பள்ளிகளில் 93.20% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளி தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் 94.33 சதவீதத்துடன் முதலிடம் பிடித்தது. ஈரோடு 93.62 சதவீதத்துடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. மேலும், 92.9 சதவீதத்துடன் நாமக்கல் மாவட்டம் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்கள் 88.98% பேரும், சிறைவாசிகள் 86.40% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
TN DGE announces Class XI exam results pic.twitter.com/FbpbVx2z2O
— Ram Krishna (@nanasaiin) May 19, 2023