இந்தியாவில் 118.44 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: மத்திய அரசு..!

இந்தியாவில் 118.44 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் இதுவரை 118.44 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 76,58,203 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1,18,44,23,573 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் 18 முதல் 44 வயதிற்குட்பட்டவர்கள் முதல் தவணையாக 44,66,37,552 பேரும், இரண்டாம் தவணையாக 19,89,48,841 பேரும் செலுத்தியுள்ளனர். 45 முதல் 59 வயதிற்குட்பட்டவர்கள் முதல் தவணையாக 18,17,64,052 பேரும், இரண்டாம் தவணையாக 11,33,02,934 பேரும் செலுத்தியுள்ளனர்.

60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் முதல் தவணையாக 11,38,31,778 பேரும், இரண்டாம் தவணையாக 7,53,91,749 பேரும் செலுத்தியுள்ளனர். சுகாதாரத்துறையினர் முதல் தவணையாக 1,03,82,725 பேரும், இரண்டாம் தவணையாக 94,26,512 பேரும் செலுத்தியுள்ளனர். முன்களப்பணியாளர்கள் முதல் தவணையாக 1,83,76,833 பேரும், இரண்டாம் தவணையாக 94,26,512 பேரும் செலுத்தியுள்ளனர்.