திருச்சி விமான நிலையத்தில் 115 கிராம் தங்கம் பறிமுதல்…!!!

278

திருச்சி விமான நிலையத்தில், ஒரு பயணியிடம் இருந்து 115 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியாவில் இருந்து வந்த விமானம் ஒன்றில் 115 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த விமானத்தில் வந்த மணி கலியபெருமாள் என்ற பயணியிடம் இருந்து 115 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த தங்கத்தின் மதிப்பு ரூ. 3.52 லட்சம் என தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார் மணி கலியபெருமாளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.