பப்ஜி (PUBG) கேமை உடனடியாக தடை செய்ய வேண்டும்! 11 வயது சிறுவன் போட்ட பொதுநல வழக்கு! காரணம் என்ன?

பப்ஜி (PUBG) கேமை உடனடியாக தடை செய்ய வேண்டும்! 11 வயது சிறுவன் போட்ட பொதுநல வழக்கு! காரணம் என்ன?

உலகம் முழுக்க இன்று மிக பிரபலமாக விளையாடி வருகின்ற ஒரு கேம் என்றால் அது பப்ஜி (PUBG) தான். இன்று வரை பல உலக சாதனைகளை இந்த கேம் செய்துள்ளது. முன்பிருந்த பிரபலமான ஆன்லைன் கேம்கள் செய்த சாதனைகளை எல்லாம் பப்ஜி கேம் தொம்சம் செய்துவிட்டது.

அன்றாடம் இந்த கேமை 3 கோடிக்கும் மேலானோர் விளையாடுவதாக இந்த கேமை உருவாக்கிய நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்படி பல சாதனைகளை செய்த கேமை உடனடியாக தடை செய்ய வேண்டும் என வெறும் 11 வயதே நிரம்பிய சிறுவன் வழக்கு தொடுத்துள்ளார். இதற்கான காரணத்தை இனி அறியலாம்.

பப்ஜி
PUBG என்பதன் விரிவாக்கம் ‘PlayerUnknown’s Battlegrounds’ என்பதாகும். இந்த கேம்மின் சிறப்பம்சமே முகம் தெரியாத நபர்களுடன் கூட நம்மால் விளையாட முடிவதே. உலகம் முழுக்க 20 கோடிக்கும் மேல் இந்த கேமை பதிவிறக்கம் செய்துள்ளனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த கேமிற்கு அடியானவர்கள் பலர்.

வழக்கு!
இவ்வளவு பெருமைகளை குவித்து வைத்துள்ள இந்த கேமை தடை செய்ய வேண்டும் என மும்பையை சேர்ந்த சிறுவன் பொதுநல வழக்கு போட்டுள்ளார். மேலும், இது போன்ற ஆன்லைன் கேம்களுக்கென்று சீரான வரையறை கொண்டு வர வேண்டும் எனவும் இவர் கூறியுள்ளார்.

காரணம்!
இந்த வழக்கை இச்சிறுவன் தொடுக்க முக்கிய காரணமே இந்த கேம் ஏற்படுத்த கூடிய தாக்கம் தான். கோபம், வன்முறை, வெறுப்பு, கொலை, பழி வாங்குதல்… இப்படி பல மனித தன்மையற்ற காரணிகள் இந்த கேமில் இருப்பதாலே இதை தடை செய்ய வேண்டும் என வழக்கு பதிவு செய்துள்ளார்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *