நியூசிலாந்தில் (வெப்ப காற்று பலூன்) மோதியதில் 11 பேர் காயம்…!

நியூசிலாந்தின் தென் தீவில் உள்ள பிரபல சுற்றுலா நகரத்தில் Hot Air Balloon (வெப்ப காற்று பலூன்) மோதியதில், இரண்டு பேர் பலத்த காயமடைந்தனர், மேலும் 9 பேர் மிதமான  காயமடைந்தனர். அரோட்டவுனில் உள்ள மோர்வன் ஃபெர்ரி சாலை அருகே இன்று காலை 10 மணியளவில் இந்த விபத்து நடைபெற்றதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பலூன் ஒரு வீட்டில் மோதியதாக ஆரம்பத்தில் நிலையில், குயின்ஸ்டவுன் மேயர் ஜிம் போல்ட் ரேடியோ கூறுகையில், இந்த பலூன் அவசரமாக தரையிறங்கவில்லை. அது தரையிறங்க வேண்டிய இடத்தில் இறங்கியது. ஆனால், பலூனை தரையிறங்கிய முறை தவறாக இருந்தது என கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.