10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் - குளறுபடிகள் ஏதும் இல்லை- அமைச்சர் செங்கோட்டையன்!

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் - குளறுபடிகள் ஏதும் இல்லை- அமைச்சர் செங்கோட்டையன்!

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களில் குளறுபடிகள் ஏதுமில்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

கனமழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவின் பேரில் பவானிசாகர் அணை, கீழ்பவானி வாய்க்காலில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மதிப்பெண் வழங்கப்பட்டதில் எந்தக் குளறுபடிகளும் இல்லை என தெரிவித்துள்ளார்.