10-ம் வகுப்பு பொதுத்தேர்விற்கான அட்டவணை தயார் ! தயாராகுங்கள் மாணவர்களே

10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் உறுதியாக நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 24 -ம் தேதி 21 நாள்களுக்கு முதற்கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பதிப்பு அதிகரித்துக்கொண்டே சென்றதால் ஊரடங்கு மேலும் 19 நாள்களுக்கு நீடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்தியாவில்  கொரோனா  கட்டுக்குள் வராததால்  ஊரடங்கு மேலும் இரண்டு வாரத்திற்கு மத்திய அரசு நீட்டித்தது.

ஊரடங்கு காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டது. இதனால் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவிருந்த தேர்வுகள் நடத்தப்படாமல் 1 முதல் 9 வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதாமல் தேர்ச்சி என தமிழகம் உட்பட பல  மாநிலங்கள் அறிவித்தது.

இதனிடையே தமிழகத்தில்  10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முதற்கட்ட  ஊரடங்கு பின்னர் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில்,  மீண்டும் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் உறுதியாக நடைபெறும். உயர்மட்டக்குழு கூட்டத்திற்கு பின் ஜூன் மாத இறுதிக்குப் பிறகு பொதுத் தேர்வு கால அட்டவணையை அறிவிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.