#Breaking : 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு! 100% தேர்ச்சி!

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.

இன்று 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 9:30 மணிக்கு வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில், தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை இணையதளங்கள் வழியாக அறிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் அனைவருமே 100% தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், இந்த தேர்வு முடிவுகள் இணையதளத்தில் மட்டுமல்லாது, தொலைபேசி எண்களுக்கும் குறுந்தகவல் மூலமாக, தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை, மாணவர்கள் https://tnresults.nic.in, https://dge1.tn.nic.inhttps://dge2.tn.nic.in ஆகிய இணையதள பக்கத்தில் காணலாம்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.