கனமழை எதிரொலி !10 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை …

                          Image result for tamilnadu rAIN 2017
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் , திருவாரூர் ,  திருவண்ணாமலை, நாகப்பட்டினம், விழுப்புரம் , கடலூர், காரைக்கால், வேலூர் ஆகிய 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
                           Related image
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.இதனால் வெள்ள நீர் புகுந்து பல இடங்களில் சாலை போக்குவரத்து பாதிப்படைந்தது.  பொதுமக்கள் பணிக்கு செல்வதில் இடையூறு ஏற்பட்டது.
                      Image result for tamilnadu rAIN 2017

மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .அரக்கோணம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் மழை காரணமாக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தொடர் மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.மழை  மேலும் தீவிரமடையும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.