விண்டோஸ் 10 தளத்தில் இயங்கும் கோர்ட்டானா பற்றிய தகவல் !!!

முதலில்  விண்டோஸ் மொபைல் போன்களுக்கு மட்டுமே பொருந்து வகையில் உருவாக்கப்பட்டது தான் கோர்ட்டானா செயலி. ஆனால் தற்போது விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்ட டெக்ஸ்டாப் மற்றும் லேப்டாபிலும் செயல்படும் வகையில் டெக்னாலஜி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

விண்டோஸ் 10 இயங்கு தளத்தை அப்டேட் செய்தால், மைக்ரோசாப்ட் நிறுவனம் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள இண்டர்நெட் எக்ஸ்புளோரின் எட்ஜ் வெர்ஷனை அளிக்கும்.
கோர்ட்டானால் மற்றும் எட்ஜ் பிரெளசர் ஆகியவை ஒன்றுக்கு ஒன்று இணக்கமாக செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால் எட்ஜ் பிரெளசரில் பாப் அவுட் முறையில் வாய்ஸ் அசிஸ்டெண்ட் செயலியை பயன்படுத்தி கொள்ளலாம்.
விண்டோஸ் 10 இயங்கு தளத்தில் கோர்ட்டானாவை செயல்படுத்த எளிதான பட்டன்கள் உருவாக்கப்பட்டிருப்பதால் கம்ப்யூட்டர் அறிவு குறைவானவர்கள் கூட பட்டன்களை அழுத்தி வாய்ஸ் அசிஸ்டெண்ட் சேவையை பெற்று கொள்ளலாம்.
உங்களுடைய கட்டளைகளை நிறைவேற்றும் ஒரு செயலியாக மட்டுமின்றி இந்த கோர்ட்டானா உங்களுக்கு போர் அடிக்கும் நேரத்தில் ஜோக் சொல்லவும், பாட்டு பாடி மகிழ்விக்கவும் செய்யவும்.
author avatar
Castro Murugan

Leave a Comment