கிருஷ்ணகிரியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கு அரசு கல்லூரி வளாகத்தில் அழிக்கப்பட்ட 100 மரங்கள்..!

கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரியில் 23தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டினை கொண்டாடுவதற்காக முதல்வர்.பழனிச்சாமி,பன்னிர்செல்வம்,தம்பிதுரை அவர்கள் வருகைதர உள்ளனர் .இதன் காரணமாக ஆண்டாண்டு காலமாக வளர்தெடுத்த சுமார் நூறு மரங்களை வெட்டிச் சாய்த்து உள்ளனர். கல்லூரி பாதுகாப்பு கருதி கட்டப்பட்ட சுற்றுச்சுவர்களை இடித்துள்ளனர்.

நீண்ட காலமாக திருவண்ணாமலை-கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை அமைத்து தர இம்மாவட்டத்தை சார்ந்த மக்களால் போராடியதை கண்டு கொள்ளாமல் இருந்த தமிழக அரசு இப்போது கார் நிறுத்துவதற்கு பிரமாண்ட சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

நடைபெற இருக்கிற நூற்றாண்டு விழாவினை ஒட்டி வெட்டப்பட்ட மரங்களை இக்கல்லூரி மாணவர்களால் பல ஆண்டு காலமாக பாதுகாத்து வளர்த்த மரங்கள் ஒருநாள் நிகழ்விற்காக அழிக்கப்பட்டுள்ளதை எண்ணி மனவேதனையுடன்……..இந்திய மாணவர் சங்கம் சார்பாக வன்மையாக கண்டனங்களை தெரிவித்திருகிறார்கள் அரசு கலை கல்லூரி மாணவர்கள்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment