30 C
Chennai
Wednesday, May 19, 2021

குட் நியூஸ்.. மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றிலிருந்து ஒரே நாளில் 10,000க்கும் மேற்பட்டோர் குணமடைந்தனர்!

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றிலிருந்து ஒரே நாளில் 10,014 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 11,088 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,35,601 ஆக உயர்ந்தது.

அம்மாநிலத்தில் இன்று 256 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18,306 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 10,014 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 3,68,435 ஆக உயர்ந்துள்ளது.

அதுமட்டுமின்றி, மகாராஷ்டிராவில் 1,48,553 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

Latest news

Related news