Isael - Hamas War

காசா நகரில் அடையாளம் தெரியாத 1,000 பேர் உடல்கள் – WHO தகவல்!

By

காசாவில் இன்னும் 1,000 அடையாளம் தெரியாத உடல்கள் இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்து கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது என உலக சுகாதார அமைப்பின் அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்துள்ளார்.

   
   

கடந்த அக்டோபர் 7ஆம் தேதி பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் மீது போர் தொடுத்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து 20 நாட்களாக வான்வழி தாக்குதலை நடத்தி வரும் நிலையில், நேற்றைய தினம் முதல் தரைவழி தாக்குதலை தொடங்கியுள்ளது.

ஹமாஸ்-இஸ்ரேல் இடையேயான போரில் காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,000-ஐ கடந்ததாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், 15,000-க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர்.

அது மட்டும் இல்லாமல், 1,500 பேர் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களில் 830 பேர் குழந்தைகள் எனவும் காசா சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ஹமாஸ்-இஸ்ரேல் இடையேயான போரில் காசா நகரங்களில் பல பகுதிகளில் கட்டிடங்கள் சுக்கு நூறாக நொறுங்கி உள்ளது.

தெரு நாய்க்கு நெதர்லாந்து பெண் செய்த செயல்…நெகிழ்ந்த போன இந்தியர்கள்!

இப்பொது, இந்த இடிபாடுகளுக்கு அடியில் அடையாளம் தெரியாத 1,000 உடல்கள் புதைந்து கிடப்பதாகவும், அந்த உயிரிழந்த உடல்களின் எண்ணிக்கை இன்னும் இறப்பு எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை என உலக சுகாதார அமைப்பின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த கேள்விக்கு, பதிலளிக்கையில் அப்பகுதிக்கான WHO அதிகாரி ரிச்சர்ட் பீபர்கார்ன் என்பவர் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.

இஸ்ரேல் தாக்குதலில் 50 பணயக் கைதிகள் உயிரிழப்பு – ஹமாஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

இதற்கிடையில், இஸ்ரேல் – ஹமாஸ் படை இடையே நடந்து வரும் போரால், காசா பகுதியில் உள்ள பொதுமக்கள் உணவு, தண்ணீர், மின்சாரம் உட்பட அடிப்படை வசதிகளின்றி தவித்து வருகின்றனர். இதனால், காசாவில் வாழும் மக்களில் 96% பேர் வறுமையில் தள்ளப்பட்டுள்ளதாக மேற்கு ஆசியாவிற்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் தெரிவித்துள்ளது.

Dinasuvadu Media @2023