தமிழகத்தில் 1,000 தானியங்கி மழைமானிகள் – ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் நீர்வள ஆதாரங்களை கண்டறிய தானியங்கி மழைமானிகள் அமைக்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு.

மாநிலத்தின் நீர்வள ஆதாரங்களை கண்டறிய தமிழகத்தில் 1,000 தானியங்கி மழைமானிகள் அமைக்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் தேசிய நீரியல் திட்டத்தின் கீழ் 1,000 தானியங்கி மழைமானிகள் அமைக்கப்படவுள்ளன என்று நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தமிழகத்தில் 34 ஆறுகள், 17 ஆற்று வடிநிலங்கள், 127 உப விளை நிலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. மாநிலத்தின் சராசரி மழை 960 மி.மீ என்று தகவல் கூறப்படுகிறது. இதில், தென்மேற்கு பருவமழை மூலம் சராசரி 439 மி.மீட்டரும், வடகிழக்கு பருவமழை மூலம் சராசரி 440 மி.மீட்டர் மழை கிடைப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே, மேற்பரப்பு நீர் பற்றிய நிகழ்வு நேர தரவுகளை சேகரிக்க தானியங்கி மழைமானிகள் அமைக்கப்படுகிறது.

அதன்படி, தமிழகம் முழுவதும் 1,166 பிர்காக்களில் 1,000 பிர்காக்களில் ஏற்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை டெண்டர் வெளிப்படை தன்மை சட்டம் 2000-ன் கீழ் உள்ள நடைமுறைகளை பின்பற்றி தானியங்கி மழை மானிகளை கொள்முதல் செய்தல், நிறுவுதல் மற்றும் இயக்குதல் ஆகியவற்றை மேற்கொள்ளுமாறு ஏற்கனவே கேட்டுக்கொள்ளப்பட்டது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment