10% இடஒதுக்கீடு எதிராக மனு: மத்திய அரசு 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு

10% இடஒதுக்கீடு எதிராக மனு: மத்திய அரசு 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு

  • பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு
  • எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு
  • மத்திய அரசு 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு

10% இடஒதுக்கீடு தருவதற்கு எதிராக திமுக தொடர்ந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசு 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு:

பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள பொதுப்பிரிவினருக்கு 10% கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.மக்களவை மற்றும் மாநிலங்களவையில் கடந்த சில தினங்களுக்கு முன்னா் இந்த மசோதா மீது  விவாதம் நடைபெற்று குடியரசுத் தலைவா் ஒப்புதலுடன் சட்டம் இயற்றப்பட்டது.

எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு:

ஜனவரி 18 ஆம் தேதி  பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு தருவதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்தது. திமுக முதன்மைச் செயலர் ஆர்.எஸ். பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மத்திய அரசு 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு:

இந்நிலையில் இன்று  பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு தருவதற்கு எதிராக திமுக தொடர்ந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசு 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் மத்திய அரசு வாதத்தில் ,திமுக அரசியல் நோக்கத்திற்காக வழக்கு தொடர்ந்துள்ளது.ஆர்எஸ் பாரதி நேரடியாக பாதிக்கப்படவில்லை, என்பதால் அவரால் பொதுநல வழக்கு தொடர முடியாது என்று வாதிட்டது.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *