கர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா.!

இந்தியா முழுவதும் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 724 ஆக உயர்ந்து, பலி எண்ணிக்கை 17 ஆக உள்ளது. இந்த நிலையில் கர்நாடகாவில் 55 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று மட்டும் 6 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதன்மூலம் கர்நாடகாவில் பாதிப்பு எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது என்றும் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், 10 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பதாக கர்நாடகா அரசு உறுதி செய்துள்ளது. அந்த குழந்தை வெளிநாடுகள் சென்று வந்ததாக தகவல் இல்லை என்றும் அக்குழந்தையின் குடும்பத்தினர் கேரளா சென்று திரும்பியுள்ளார் என்று தகவல் கூறப்படுகிறது. பின்னர் அந்த குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் மூச்சு திணறல் போன்றவை இருந்துள்ளது. இதன் காரணமாக கடந்த 23ம் தேதி மங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தையை அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பரிசோதனையின் மூலம் மார்ச் 26ம் தேதி குழந்தைக்கு கொரோனா இருப்பது உறுதியானது. தற்போது அக்குழந்தையின் உடல்நிலை சீராக ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே குழந்தையுடன் இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக மங்களூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்