10 கிலோ எடையில் அதிசய காளான்…!!!

மேட்டூர் அருகே, கோனூர் கிராமம் தோட்டக்காடு பகுதியை சேர்ந்தவர் கோபால் (75). இவர் அவரது நிலத்தில் உளுந்து சாகுபடி செய்திருந்தார்.கடந்த வாரம் ஊருக்கு சென்று புதன்கிழமை அன்று வீடு திரும்பியுள்ளார்.

தோட்டத்தை சுற்றி பார்க்க சென்ற போது, உளுந்து பயிருக்கு இடையே, 6 இதழ்களுடன் 10 கிலோ எடை கொண்ட காளான் வளர்ந்திருந்ததை பார்த்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் அதிசயமாய் பார்த்து செல்கின்றனர்.