நேபாள நிலச்சரிவு: 10 பேர் இறப்பு, 40 க்கும் மேற்பட்டோர் காணவில்லை தகவல்.!

நேபாள நிலச்சரிவுகள்: மாக்டி, ஜாஜர்கோட் மற்றும் சிந்த்பால்ச்சோக் ஆகிய இடங்களில் வீடுகளை நிலச்சரிவு ஏற்பட்டதால் 10 பேர்  இறந்தனர், பலர் காணாமல் போயுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

கடுமையான மழைக் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் நேபாளத்தின் மாக்தி, ஜாஜர்கோட் மற்றும் சிந்த்பால்சாக் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நேபாளத்தின் பல மாவட்டங்களில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவைத் தொடர்ந்து இதுவரை 40 பேர் காணாமல் போயுள்ளதாகவும் 10 பேர் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், ஜோகிமாரா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு மேற்கு நேபாளத்தின் ப்ரிதி நெடுஞ்சாலையில் தடையாக உள்ளது. கடந்த 48 மணி நேரமாக தொடர்ந்து பெய்த மழையால் நாராயணியும் நாட்டின் பிற முக்கிய நதிகளும் உடைந்துள்ளது. பருவமழை இன்னும் மூன்று நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.