10 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தபட்ட கார்கள் இனி அரசாங்கத்திற்க்கு சொந்தம்!

வருடா வருடம் பெட்ரோல் டீசல் வாகனங்களை வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. மக்களின் தேவையும் அதிகரித்து வருவதால் வாகனங்களை வாங்குவது இன்றியமையாதது.
அரசாங்கமும் பெட்ரோல்,  டீசல் காரை உபயோகிக்காதீர்கள் என கூறி மின்சாரத்தால் இயங்கும்.கார்களை உபயோகபடுத்த கூறி வருகிறது ஆனால் அந்த வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப தேவையான இடம் இல்லாததால் மக்கள் மின்சாரகார்களின் பயன்பாட்டிற்க்கு மாற தயங்குகின்றனர்.
இதனால் பல இடங்களில் சுற்றுசூழல் மாசுபாடு உருவாகியுள்ளது. முக்கியமாக நம் நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு அதிகமாகவுள்ளது. இதனால் அரசு ஓர் கடுமையான சட்டத்தை நிறுவி உள்ளது. அதாவது  வாகனங்களின் பயன்பாட்டு அதிகமாக இருந்தால் வாகனங்களின் இருந்து வரும் மாசுபுகையும் அதிகமாக வரும் என்பாதால் அதிகமாக பயன்படுதபட்ட கார்களை பரிமுதல் செய்ய அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. அதாவது பெட்ரோல் பயன்படுத்தும் கார்கள் 15ஆண்டுகளுக்கு மேலாகவும், டீசல் கார்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாகவும் உபயோகபடுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவ்வாறு பயன்படுத்தும் வாகனங்களை வீடுபுகுந்து பரிமுதல் செய்யவும் அரசு முடிவு செய்து உள்ளது.
DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment