1 வருடத்திற்கு முன்பு ஷெரின்.! 10கிலோ எடையை குறைத்து ஸ்லிம்மாக மாற்றம்.! 

ஷெரின் தற்போது 10கிலோ வரை எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய புகைப்படம்

By ragi | Published: Jul 07, 2020 09:00 AM

ஷெரின் தற்போது 10கிலோ வரை எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

ஷெரின், ஆரம்ப காலத்தில் தமிழ் மலையாளம், தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் தமிழில் இவர் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அதனையடுத்து விசில் படத்தில் உள்ள 'அழகிய அசுரா' பாடலால் தான் இவர் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார். அதனையடுத்து சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். ஆம், இவருக்கென்று ரசிகர்கள் ஆர்மி வைத்துள்ளனர்.

இந்த நிலையில், வழக்கமாக புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் இவர் தற்போது ஒரு வருடத்திற்கு முன்பு பிக்பாஸ் வீட்டினுள்  உடல் பருமனுடன் உள்ள புகைப்படத்தையும், அதே ஆடையில் தற்போது 10கிலோ வரை  உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய புகைப்படத்தையும் சேர்த்து வெளியிட்டுள்ளார். அதனுடன் ஒரு வருடம் மற்றும் சில 10கிலோவிற்கு பிறகு, இப்போது நான் பார்க்கும் விதத்தில் மகிழ்ச்சியடைகிறேன்.

உடல் எடையை குறைப்பது எளிதானது, ஒருவரை புண்படுத்தும் வகையிலான வார்த்தைகளை பயன்படுத்தாமல் மகிழ்ச்சியாக இருந்தாலே போதும். உங்களது எதிரில் உள்ளவர்கள் சிரிக்க வேண்டுமா, அழ வேண்டுமா என்பதை நீங்கள் தான் தேர்வு செய்ய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். தற்போது இவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சற்று அதிர்ச்சியில் உள்ளதோடு, போட்டோவை வைரலாக்கியும் வருகின்றனர்.

Step2: Place in ads Display sections

unicc