பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

இன்று  பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.

கடந்த மார்ச் மாதம் +2 மற்றும் +1 பொதுத்தேர்வு நடைபெற்று இதில் இதையடுத்து, கடந்த 16-ஆம் தேதி +2 பொதுத்தேர்வு  முடிவுகள் வெளியானது. அதன் தொடர்ச்சியாக 8 லட்சத்து 32 ஆயிரத்து 475 பேர் எழுதிய +1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கொரோனா ஊரடங்கு காரணமாக +1 பொதுத்தேர்வின் இறுதிநாள் தேர்வு ரத்து செய்யப்பட்டு, ரத்து செய்யப்பட்ட தேர்வின் முடிவுகள் காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள் மற்றும் வருகைப்பதிவு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த தேர்வு முடிவு வெளியிடப்பட உள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை  கீழே உள்ள இணையதளங்கள் வழியாக அறிந்து கொள்ளலாம்.

www.tnresults.nic.in

www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in

மேலும் எஸ்.எம்.எஸ். மூலம் மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி மற்றும் இணையதளம் வாயிலாக மதிப்பெண் பட்டியல் வழங்குவதற்கான தேதி மற்றும் வழிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

author avatar
murugan