#Breaking: “சட்டப்பேரவை தேர்தலில் 1.71 கோடி பேர் வாக்களிக்கவில்லை”- தலைமை தேர்தல் அதிகாரி!

தமிழகத்தில் 72.78 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள நிலையில், தற்பொழுது 72.81 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6-ம் தேதி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. காலை முதலே பொதுமக்களுடன் பிரபலங்களும் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்து வந்தனர்.சில இடங்களில் இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்க 1 மணிநேரம் வரை தாமதம் ஏற்பட்டது.

இந்த தேர்தலில் மக்கள் சிரமமின்றி வாக்களிக்க தமிழகம் முழுவதும் 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டது. பதத்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. மேலும், இந்த தேர்தலில் 72.78 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள நிலையில், 72.81 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். மொத்தமுள்ள 6.28 கோடி வாக்காளர்களில் 1.17 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.