தமிழகத்திற்கு 1.50 லட்சம் RT-PCR கருவிகள் வருகை.!

தமிழகத்திற்கு 1.50 லட்சம் RT-PCR கருவிகள் வருகை.!

தமிழகத்திற்கு 1.50 லட்சம் RT-PCR சோதனை கருவிகள் வந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா  தடுக்க நடவடிக்கையாக மே 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பொதுமக்களின் அத்தியாவசிய தேவைக்காக பல்வேறு தளர்வுகளை மத்திய அரசும், மாநில அரசும் அறிவித்து வருகின்றனர். 

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றை கண்டறிய  RT-PCR கருவிகள் மூலம் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை, 2, 16, 416 மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், கூடுதல் சோதனை கருவிகள் வாங்க திட்டமிடப்பட்டது.

முதலில் ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. இந்த கருவிகள், அனைத்து மாவட்ட மருத்துவமனைகளுக்கும் கொடுக்கப்பட்டு சோதனைகள் நடைபெற்று வருகிறது.  இதற்கிடையில், தென்கொரியாவில் இருந்து 10 லட்சம் பிசிஆர் கிட்களை வாங்க அரசு ஆர்டர் செய்தது. இதையடுத்து  தென்கொரிய நிறுவனத்திடமிருந்து மேலும், 1.50 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்தது.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube