தேர்தல் பறக்கும் படையினர் நெல்லையில் 1.40 லட்சம் பறிமுதல்…

  • தேர்தல் பறக்கும் படையினர் நெல்லை அருகே 1.40 லட்சம் பறிமுதல்.

வரும் ஏப்ரல் 18-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்த தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும், மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் பல விதிமுறைகளை விதித்துள்ளது. இந்நிலையில், காவல்துறையினர் இந்த விதிமுறைகளை கைக்கொள்ளும் வண்ணம், அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

இன்று நெல்லையில்  தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.1.40 லட்சம் பறிமுதல் செய்தனர்.

நெல்லை அருகே அழகிய பாண்டியபுரத்தில் தேர்தல் அதிகாரிகள் நடத்திய சோதனையில்,உரிய ஆவணமின்றி எடுத்துச்செல்லப்பட்டதால் ரூ.1.40 லட்சம் பறிமுதல் செய்ததாக தெரிவித்து உள்ளனர்.

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment