ஐஆர்என்எஸ்எஸ் 1எச் செயற்கைக்கோள் கவுன்ட் டவுன் தொடக்கம்: பிஎஸ்எல்வி சி39 ராக்கெட்டில் அனுப்பபடுகிறது

ஸ்ரீஹரிக்கோட்டா: ஸ்ரீஹரிக்கோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஐஆர்என்எஸ்எஸ் 1எச் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான கவுன்ட் டவுன் இன்று தொடங்குகிறது. கடல் சார் ஆராய்ச்சி, இயற்கை சீற்றம், பேரிடர் மேலாண்மை போன்ற பயன்பாடு காரணமாக இந்த செயற்கைக்கோள் நாளை மாலை 6.59 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 29 மணி நேர கவுண்டவுன் புதன்கிழமை பகல் 1.59 மணிக்கு தொடங்குகிறது. 320 டன் எடையும் 44.4 மீ உயரமும் கொண்ட பிஎஸ்எல்வி சி39 ராக்கெட்டில் 1425 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள் பொருத்தப்பட்ட விண்ணிற்கு அனுப்பப்படுகிறது. 

தற்போது ராக்கெட்டின் பாகங்கள் பொருத்தப்பட்டு எரிபொருள் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து குறைந்தபட்சம் 284 கிலோ மீட்டர் தொலைவிலும், அதிகபட்சமாக 20,657 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை நிறுத்தப்பட உள்ளது. கடல் சார் ஆராய்ச்சிக்காக 7 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதலில் செலுத்தப்பட்ட ஐஆர்என்எஸ்எஸ் 1 ஏ செயற்கைக்கோளின் ஆயுள் காலம் முடிவடைவதால் புதிய செயற்கைக்கோளை இஸ்ரோ ஏவுகிறது. 

author avatar
Castro Murugan

Leave a Comment