ஹிப் ஹாப் தமிழாவின் துள்ளலான நட்பே துணையின் ஃபர்ஸ்ட் லுக்..!!!

மீசைய முறுக்கு படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹிப் ஹாப் தமிழா ஆதி இப்போ ஹாக்கி விளையாட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
Image result for hiphop tamizha
இந்த படத்தை பார்த்திபன் தேசிங்கு இயக்குகிறார்.ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக புதுமுக நாயகி அனகா நடிக்கிறார். இந்த படத்தை சுந்தர்.சி தனது சொந்த நிறுவனமான அவ்னி மூவிஸ் மூலம் தயாரிக்கிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது படத்தின் பின்னணி வேலைகள் தற்போது  மும்முரமாக நடந்து வருகிறது.
Related image
படத்தை அடுத்த வருட தொடக்கத்தில் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டு தீபாவளி ரீட் கொடுத்துள்ளது.படத்திற்கு `நட்பே துணை’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
Image result for NATPE THUNAI
படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார் மற்றும் அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவருடைய பாடல்கள் அனைத்தும் ஹிட் அடிக்கும் விதத்தில் இருக்கும் அதன் அடிப்படையில் இந்த படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment