ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் 'சொர்க்கவாசல்' வைகுண்ட ஏகாதசி திருவிழா இன்று தொடங்குகிறது…!!

திருச்சியில் பிரசித்தி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா இன்று திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி தொடர்ந்து 20 நாட்கள் நடைபெறுகிறது.
சொர்க்கவாசல் என்றே ஸ்ரீரங்கம் தான் வரும்.டிச.18ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மை பெற்ற திருத்தலம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டு  முழுவதும் பல்வேறு இங்கு உற்சவங்கள் மற்றும் விழாக்கள் நடந்து வருகின்றன. மேலும் இங்கு கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் 20 நாட்கள் நடக்கிறது வைகுண்ட ஏகாதசி விழா இந்த அண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழாவானது பகல்பத்து முதல் திருநாள் வரும் 8ம் தேதி தொடங்குகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான வைகுண்ட ஏகாதசிவிழாபரம பதவாசல் திறப்பு வரும் வரும் 18ம் தேதி அதிகாலை நடக்கிறது. இதனை அடுத்து அதிகாலை 4.15 மணியளவில் நம்பெருமாள் பாண்டியன் கொண்டை மற்றும் கிளிமாலை மற்றும் ரத்தின அங்கி ஆகியவற்றை அணிந்து பக்தர்களின் காட்சி கொடுத்தபடியே மூலஸ்தானத்தில் இருந்து சிம்ம கதியில் புறப்படுகிறார்.இதனை தொடர்ந்து அதிகாலை 5.30 மணியளவில் பரமபதவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பெருமாள் வெளியில் வருகிறார். இதனை அடுத்து காலை 7.30 மணி அளவில் நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருள்வார்.இந்த சேவை இரவு வரை நீடிக்கிறது.இதனைத் தொடர்ந்து ராப்பத்து விழா விமர்சையாக தொடங்குகிறது.

author avatar
kavitha

Leave a Comment