ஸ்டெர்லைட்டை மூட வலியுறுத்தி அதிமுக பிரமுகர் தற்கொலை மிரட்டல்

சீனாவை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியா முந்தி செல்லஉள்ளது. உலகிலேயே சல்பர்-டை-ஆக்சைடு வாயுவை அதிகமாக வெளியிடும் நாடுகளில் இந்தியா முதலிடம் பிடிக்க போவதாக சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலைகழகம் நடத்திய ஆய்வில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் 2007 முதல் இந்தியாவில் சல்பர்-டை-ஆக்சைடு உமிழ்வு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இந்தியாவில் 2012-இலிருந்து சல்பர்-டை-ஆக்சைடு உமிழ்வு அதிகரித்துள்ளது. உமிழ்வை கட்டுபடுத்த இந்தியா இதுவரை எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் சீனா இதுவரை 75 சதவீதம்வரை சல்பர்-டை-ஆக்சைடு உமிழ்வை குறைத்துள்ளது.

தமிழகத்தில் தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் நைட்ரஸ் ஆக்சைடு, சல்பர்-டை-ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு போன்ற மனித உயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சு வாயுக்களை வெளியிடுகிறது. இந்த தொழிற்சாலையை மூட சொல்லி பலர் போராட்டம் நடத்தியும் அரசு செவிசாய்க்கவில்லை

இந்நிலையில் இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கு தூத்துக்குடிக்கு வருகை தந்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இந்த பிரச்சனை பற்றி கவனம் ஈர்க்கும் முயற்சியில் தூத்துக்குடியை சேர்ந்த அதிமுக பிரமுகர் தங்கபாண்டியன் முதல்வர் செல்லும் வழியில் ஒரு டவர் மீது ஏறி ஸ்டெர்லைட்டை மூட வலியுறித்து போராட்டம் நடத்தி வருகிறார். அவர்களிடம் சிப்காட் போலீசார் சமாதானபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment