வேலூர் மாவட்டத்தில் வெளிப்படையாக கேரளா லாட்டரி விற்பனை..!

வேலூர் மாவட்டத்தில் வெளிப்படையாக கேரளா லாட்டரி விற்பனை நடைபெற்று வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆற்காடு, வாலாஜா, ராணிப்பேட்டை, ஆம்பூர், வணியம்பாடி ஆகிய பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன என்பது அப்பகுதி மக்களின் புகார்.

கர்நாடக மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த லாட்டரிகள் மற்றும் ஒரு நம்பர் லாட்டரி ஆகியவை பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் விற்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஆற்காடு பகுதியில் மக்கள் கூடும் இடங்களைக் குறிவைத்து ஒரு கும்பல் தமிழக அரசால் தடைசெய்யபட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாகவும், ராணிப்பேட்டை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமாக டோக்கன் லாட்டரி விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment