வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்..,

வெந்தயம் அனைவரின் வீடுகளிலும் சமையலுக்காக வைத்திருக்கும் பொருள் ஆகும்.அதில் மருத்துவ குணங்களும் அதிகமாக உள்ளது.
வெந்தயத்தை நீரில் 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் நீரை வடிகட்டி, அந்த நீரில் டீ தூள் கலந்து தேநீர் தயாரியுங்கள். இதனை தினமும் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.Image result for வெந்தயம்
வெந்தயத்தை நீரில் ஊற வைத்து ஒரு ஜாரில் போட்டு ஒரு சுத்தமான துணியால் மூடி வைக்கவும், ஓரிரு நாட்களில் முளைகட்டிவிடும். இந்த முளைக்கட்டிய வெந்தயத்தை தினமும் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான நல்ல பலன்கள் கிடைக்கும்.

நெல்லிக்காய் பொடியில் வந்தயப் பொடியை சேர்த்து தண்ணீர் ஊற்றி கலந்து, கூந்தலை அலசி, பின் ஈரமான கூந்தலில் அந்த கலவையை தடவி, 30 நிமிடம்  ஊற வைத்து குளிக்க வேண்டும்.Image result for வெந்தயம்

வெந்தய கீரையை பொடியாக நறுக்கி கோதுமை மாவில் பிசைந்து ரொட்டி, சப்பாத்தி அல்லது பராத்தாவாக சாப்பிடலாம்,. இட்லி மாவில் கலந்து வெந்தய இட்லி, வெந்தய தோசையாகவும் சாப்பிடுவது நல்லது.Image result for வெந்தயம்
வெந்தய பொடியை தினமும் 1 ஸ்பூன் பொரியல் மற்றும் சேலட்டின் மீது தூவி சாப்பிடவும். சர்க்கரை நோய் வராமல் தடுக்கச் செய்யும். கொழுப்பை  கட்டுப்படுத்தும். உடல் எடையை குறைக்கச் செய்யும். இவ்வாறு பல்வேறு நன்மைகளை செய்கிறது.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment