வீட்டுக்கு போறதுக்குள்ள ஒப்பந்தத்தை டிரம்ப் ரத்து செய்வார் – வடகொரியாவுக்கு ஈரான் அட்வைஸ்..!

சிங்கப்பூரில் அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் இன்று கையொப்பமிட்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடையே பேசிய டொனால்ட் டிரம்ப், இன்றைய ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதுபோல், அதில் உள்ள அம்சங்களின்படி கிம் ஜாங் அன் வாழ்ந்து காட்ட வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஈரான் அரசின் செய்தித்தொடர்பாளர் முகமது பாகேர் நோபாக்ட், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்-னின் குணாதிசயம் பற்றி எங்களுக்கு தெரியாது. இருப்பினும், அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையே இன்று கையெழுத்தான அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான ஒப்பந்தம் அவர் நாடு திரும்பும் முன்னரே ரத்து செய்யப்பட்டாலும் செய்யப்படாலாம் என கூறினார்.
மேலும், டொனால்ட் டிரம்பை  கிம் ஜாங் அன் நம்பக் கூடாது. ஈரானுடன் அமெரிக்கா செய்து கொண்ட அணு ஒப்பந்தத்தை, டிரம்ப் வெளிநாட்டில் இருக்கும் போதே ரத்து செய்தார் என்பதை மறந்துவிடக்கூடாது என முகமது பாகேர் நோபாக்ட் தெரிவித்தா
author avatar
Dinasuvadu desk

Leave a Comment