விராட் நீங்க கேப்டனுக்கு சரிபட்டு வர மாட்டீங்க …!அவர எதுக்கு பந்து வீச சொல்லல?கோலியிடம் சீரிய இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

விராட் நீங்க கேப்டனுக்கு சரிபட்டு வர மாட்டீங்க …!அவர எதுக்கு பந்து வீச சொல்லல?கோலியிடம் சீரிய இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

இந்திய அணியின் தோல்வி குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசேன் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்கியது.இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 89.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 287 ரன்கள் மட்டும் அடித்தது.
Image result for virat ashwin SAM CURREN
இந்திய அணியின் பந்துவீச்சில் அஷ்வின்4 விக்கெட்டுகளும்,முகமது சமி 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.இங்கிலாந்து அணியில் அதிக பட்சமாக கேப்டன் ஜோ ரூட் 80 ரன்கள்,ஜானி 70 ரன்களும் அடித்தனர்.
இதன் பின் முதலாவது இன்னிங்சில் இந்திய அணி 76 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது 274 ரன்கள் அடித்ததது.
இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 149 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். களத்தில் உமேஷ் 1 ரன்களுடன் இருந்தார்.
Image result for virat ashwin SAM CURREN
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் சாம் குரான் 4 விக்கெட்டுகள்,அன்டர்சன்,ஸ்டோக்ஸ்,ரஷித் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர்  விளையாடிய இங்கிலாந்து அணி 53 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது 180 ரன்கள் மட்டுமே அடித்ததது.
இந்திய அணியின் பந்துவீச்சில் அஷ்வின் 3 விக்கெட்டுகளையும் மற்றும் இஷாந்த் சர்மா 5 மற்றும் உமேஷ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.இதனால் இந்திய அணி வெற்றி பெற 194 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது.இந்திய அணியின் பேட்டிங் வரிசையை இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் சிதைத்து விட்டனர். இந்திய அணி 54.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் மட்டுமே அடித்தது.
முன்னணி வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.தவான் 13,விஜய் 6,ராகுல் 13,ரகானே 2,அஷ்வின் 13 ரன்களில் வெளியேறினர்.பின் விராட் மட்டும் பொறுமையாக ஆடி 51 ரன்கள் எடுத்தார்.மேலும் தினேஷ் 20, பாண்டியா 31 ரன்கள் எடுத்தனர்.இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனால் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இது குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசேன் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில் ,இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்ஸ்மேன் ஆக சிறப்பாக செயல்பட்டுள்ளார்.அதுவும் குறிப்பாக டெயில் எண்டர்களுடன் ஆடி இந்திய அணியை டெஸ்ட் போட்டிக்குள் கொண்டு வந்தார்.
Image result for virat ashwin SAM CURREN
அவ்வளவு விராட் விளையாடியும் இந்திய அணி தோல்வி அடைந்திருப்பதால் தோல்விக்கு அவர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.இதனால் விராட் தனது தலைமை குறித்து யோசிக்க வேண்டும்.குறிப்பாக இங்கிலாந்தின் இடது கை ஆட்டக்காரர் சாம் கரான் களத்தில் இருக்கும் போது இடது கை வீரர்களுக்கு சிறப்பாக பந்து வீசும் அஷ்வினை பந்துவீச சொல்லாதது என் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *