விபத்தில்லா பயணம் செல்ல தான் 8 வழிச்சாலை திட்டம்…முதலமைச்சர் பழனிசாமி பேச்சு…!!

விபத்தில்லா பயணம், எரிபொருள் சிக்கனத்திற்காகவே 8 வழிச்சாலை திட்டம் கொண்டு வரப்பட்டது என முதலமைச்சர் பழனிசாமி சேலத்தில் பேசினார்.
சேலத்தின் குரங்குசாவடி இரும்பாலை சாலை சந்திப்பு பகுதியில் கட்டப்பட்ட ரூ.21.97 கோடி மதிப்பிலான உயர்மட்ட மேம்பாலத்தை முதலமைச்சர் பழனிசாமி இன்று திறந்து வைத்துள்ளார்.அதன்பின்னர் அவர் கூட்டத்தினரிடையே பேசும்பொழுது, வளர்ச்சி திட்டங்களை வரவேற்க வேண்டும், விபத்தில்லா பயணம் மற்றும் எரிபொருள் சிக்கனத்திற்காகவே 8 வழிச்சாலை திட்டம் கொண்டு வரப்பட்டது.
70 கி.மீ. தொலைவு குறைந்து நேரம் மிச்சப்படும் என்ற காரணத்தினாலேயே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.இதனால் தனிப்பட்ட முறையில் எனக்கு எந்தவித ஆதாயமும் இல்லை.  அ.தி.மு.க. அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று சிலர் இதற்கு எதிராக செயல்படுகின்றனர்.  மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவமனைகள் விரிவு செய்யப்பட்டு வருகின்றன.  தமிழகத்தில் பொதுமக்கள் பாதிக்காத வகையில் விலைவாசி கட்டுப்பாட்டில் உள்ளது என்று பேசியுள்ளார்.
அவர் தொடர்ந்து, சேலம் மாநகராட்சியில் தினந்தோறும் பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீர் வழங்க ரூ.110 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.  நாட்டின் வளர்ச்சிக்கு கல்வி முக்கியம், கல்வி சிறந்தால்தான் நாடு முன்னேறும்.  உயர் கல்விக்காக தமிழக அரசு அதிக நிதியை ஒதுக்கி வருகிறது என கூறினார்.
dinasuvadu.com
author avatar
Dinasuvadu desk

Leave a Comment