வாட்ஸாப் ஸ்டிக்கர் அப்ளிகேஷன்களுக்கு ஐபோனில் தடை!

வாட்ஸாப் செயலி புதிது புதிதாக அப்டேட்களை அவ்வபோது பயணர்களுக்கு வழங்கி வருகிறது. அண்மையில் ஸ்டிக்கர்ஸ் அதிகமாக இருக்கும் அப்டேட்டை வழங்கி வருகிறது. இதனை பல வாட்ஸாப் ஸ்டிக்கர்ஸ் அப்ளிகேஷனும் வழங்குகின்றன.

இந்த ஸ்டிக்கர்ஸ் அப்ளிகேஷன்  ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் செயலியில் இயங்கும் படி ஆப்கள் வருகின்றன.  இதில் ஐ போன்களில் இந்தமாதிரியான ஆப்களை இன்ஸ்டால் செய்கையில் ஐ போன் பல விதிகளை கேட்கும் அதற்கு உட்பட்டாதான் ஆப்பை இன்ஷ்டால் செய்ய முடியும். இதில் சில விதிமுறகளை வாட்ஸாப் ஸ்டிக்கர்ஸ் ஆப்கள் பின்பற்றுவதில்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது.

அதாவது ஐ போன் ஓஎஸில் ஆப்பை இன்ஸ்டால் செய்கையில் அது ஆன்ட்ராய்டு போனை விட அதிகமாக கன்டிஷன்களை கேட்டுதான் இன்ஸ்டால் செய்யும் அதில் முக்கியமானது ஒரு ஆப் இன்னொரு ஆப்பை இன்ஸ்டால் செய்ய சொல்லி நிர்பந்திக்க கூடாது. ஆனால் வாட்ஸாப் ஸ்டிக்கர் ஆப் வாட்ஸாப்பை இன்ஸ்டால் செய்ய சொல்லி நிர்பந்திக்கிறது.ஆதலால் இந்த மாதிரியான ஸ்டிக்கர்ஸ் ஆப்களை ஐ போன் தளம் தற்போது தடை செய்துள்ளது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment