வாடிக்கையாளர்களுக்கே தெரியாமல் 47 கோடி வரவு : ஏர்டெல் பேமன்ட்ஸ் பாங்க்

வாடிக்கையாளர்களிடம் பெற்ற ஆதார் எண்களை பயன்படுத்தி ஏர்டெல் நிறுவனம் ஏர்டல் பேமென்ட்ஸ் பாங்க் போன்ற வங்கி கணக்குகளை தொடங்கி அதில் வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் ரூ.47 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. சுமார் 23 லட்சம் பேர் ஏர்டல் பெமேன்ட்ஸ் பாங்க் வங்கி கணக்கு வைத்துள்ளனர்.

இந்த வங்கி கணக்கில் சமையல் கியாஸ் மானியம் உள்ளிட்டவை  வாடிக்கையாளர்களுக்கும் தெரியாமல் அவர்களது வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படாமல், ஏர்டெல் பேமெண்ட்ஸ் பாங்க் கணக்கில் இந்த பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை வாடிக்கையாளர்கள் காகிதப்பணமாக எடுக்க முடியாது. ஆன்லைன் பரிமாற்றத்துக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

இதன் காரணமாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் சென்ற பிறகு ஆதார் ஆணையம் விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து இப்போது ஏர்டெல் நிறுவனத்தின் இ–கேஒய்சி உரிமத்தை தற்காலிகமாக இடைநீக்கம் செய்து ஆதார் ஆணையம் நேற்று உத்தரவிட்டது.

இனி ஆதார் எண்ணை ஏர்டல் தங்கள் வாடிக்கையாளர்களிடம் கேட்க முடியாது

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment