வரலாற்றில் இன்று – நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், அந்தமான் தீவுகளின் போர்ட் பிளையர் நகரில் இந்திய விடுதலை கொடியை ஏற்றினார்…!

வரலாற்றில் இன்று – நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், அந்தமான் தீவுகளின் போர்ட் பிளையர் நகரில் இந்திய விடுதலை கொடியை ஏற்றினார் (டிசம்பர் 30, 1943). இரண்டாம் உலகப்போரின்போது அந்தமான் தீவுகளிலிருந்த பிரிட்டிஷ் ராணுவத்தை ஜப்பானிய படைகள் விரட்டியடித்தனர். பிரிட்டிஷ் படைகள் விரட்டியடிக்கப்பட்டதை இந்தியாவின் ஒரு பகுதி விடுதலை பெற்றதாக நேதாஜி அறிவித்து இந்தியக் கோடியை ஏற்றினார். ஆனால் இதனை காந்திஜி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஏற்கவில்லை. அந்தமானில் ஒரு அந்நிய ஆக்கிரமிப்புக்கு பதில் வேறு ஆக்கிரமிப்பு வந்துள்ளது. அதனை விடுதலையாக ஏற்க முடியாது என்று கூறிவிட்டனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment