வரலாற்றில் இன்று டிச.24 புரட்சித் தலைவர், மக்கள் திலகம் என்று அழைக்கப்படும் எம்.ஜி.ஆர் மறைந்த தினம் …

வரலாற்றில் இன்று டிச.24 புரட்சித் தலைவர், மக்கள் திலகம் என்று அழைக்கப்படும் எம்.ஜி.ஆர் மறைந்த தினம் …

புரட்சித் தலைவர், மக்கள் திலகம் என்று அழைக்கப்படும் எம்.ஜி.ஆர் மறைந்த தினம் இன்று. 1917ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் நாள் இலங்கையில் உள்ள நாவலப்பிட்டியில் பிறந்தார். மக்கள் அனைவராலும் நேசத்தோடு எம்.ஜி.ஆர் என்று அழைக்கப்பட்ட இவரின் இயற்பெயர் மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன். தன்னுடைய சிறுவயதிலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கியதோடு, தன்னுடைய அயரா உழைப்பு காரணமாக திரைத்துறையில் கால்பதித்தார். 1972ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் நாள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் துவங்கிதோடு, 1977 ல் நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்று முதல் முறையாக தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். சத்துணவுத் திட்டம், பெண்களுக்கு திருமண உதவித்தொகை, தமிழ் பல்கலைக்கழகத்தை நிறுவியது என்று இவரின் ஆட்சிக் காலத்தில் பல்வேறு சிறந்த திட்டங்களையும் நிறைவேற்றியதால், இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். முதலமைச்சர் பதவியிலிருக்கும் போதே 1987ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் அவர் இயற்கை எய்தினார். அவரது மறைவிற்குப் பின் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *