வரலாற்றில் இன்று கலாக்ஷேத்ரா நாட்டியப் பள்ளி சென்னை சென்னையில் திருமதி ருக்மிணி அருண்டேல் அவர்களால் துவங்கப்பட்ட தினம்…!!

வரலாற்றில் இன்று கலாக்ஷேத்ரா நாட்டியப் பள்ளி சென்னை சென்னையில் திருமதி ருக்மிணி அருண்டேல் அவர்களால் துவங்கப்பட்ட தினம் இன்று ஜனவரி 6, 1936. அடையாற்றில் உள்ள தியசாபிகல் சொசைட்டியில் பணியாற்றிய ஜார்ஜ் சிட்னி அருண்டேல் என்ற ஆங்கிலேயருடன் காதல் வயப்பட்டார். ருக்மிணி தேவியாக இருந்தவர் 1920-ல் ஜார்ஜைத் திருமணம் செய்து ருக்மிணி அருண்டேல் ஆனார்.
மயிலாப்பூர் கௌரி அம்மா, பந்தநல்லூர் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை ஆகியோரிடம் நடனம் பயின்ற ருக்மிணி, தியசாபிகல் சொசைட்டியின் வைர விழா நிகழ்ச்சியில் தனது முதல் அரங்கேற்றத்தை 1935-ல் நடத்தினார்.
1936-ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னை திருவான்மியூரில் கலாக்ஷேத்ரா அமைப்பைத் தனது கணவருடன் இணைந்து தொடங்கினார்.
தி பெசண்ட் தியசாபிகல் ஹை ஸ்கூல், தி மரியா மான்டிசோரி ஸ்கூல் ஃபார் சில்ரன், தி கிராஃப்ட் எஜூகேசன் அண்ட் ரிசர்ச் சென்டர் மற்றும் உ.வே.சாமிநாதையர் நூலகம் ஆகியவற்றையும் கலாக்ஷேத்ரா வளாகத்துக்குள் அமைத்துள்ளார். சென்னைக்கு மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதுமிருந்து மாணவர்கள் தங்கிப் பயிலும் கலைப் புகலிடமாக திருவான்மியூரில் உள்ள கலாக்ஷேத்ரா திகழ்கிறது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment