வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை : தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு….!!

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு வங்க கடலில் உருவான பெய்ட்டி புயல், ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையைக் கடந்தது.
தற்போது அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக் குறைந்துள்ளது. இதற்கிடையே தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து 2 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment