ரோகித் தடுத்து நிறுத்த முடியாத ஒயிட் பந்து….!ஆஸ்திரேலியா அதிரடி மன்னன்..!!!

ரோகித் தடுத்து நிறுத்த முடியாத ஒயிட் பந்து….!ஆஸ்திரேலியா அதிரடி மன்னன்..!!!

ரோகித் தடுத்து நிறுத்த முடியாத ஒயிட் பந்து….!ஆஸ்திரேலியா அதிரடி மன்னன் தெரிவித்துள்ளார்.

Image result for rohit sharma

இந்திய அணியின் ஆரம்ப தொடக்கம் கொடுக்கும் பேட்ஸ்மேன் ரோகித் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் ஒருநாள் போட்டியில் அதிக இரட்டை சதங்களும், டி20 போட்டியில் அதிக சதமும் அடித்த ஒரே வீரர் மற்றும் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

Image result for rohit sharma

இந்திய ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்ய புறப்பட்டு ஆஸ்திரேலியா சென்றுள்ளது.மேலும் ஆஸ்திரேலியாவுடன்  இந்தியா  மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை (21-ந்தேதி) பிரிஸ்பேனில் நடைபெறுகிறது. இந்த தொடரிலும் ரோகித் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் ரோகித் பற்றி ஆஸ்திரேலியாவின் அதிரடி மன்னன் மேக்ஸ்வெல் தடுத்து நிறுத்த முடியாத ரோகித் ஒயிட் பந்து ,போட்டியில் மிகப்பெரிய ஸ்டார் என்று  தெரிவித்துள்ளார்.

Related image

இதுகுறித்து மேக்ஸ்வெல்  தெரிவிக்கையில் ஒயிட் பால் கிரிக்கெட்டில் ஒருநாள் மற்றும் டி20 ரோகித் ஸ்டார். ஒருநாள் போட்டியில் மூன்று இரட்டை சதங்கள் என்பது குறைத்து மதிப்பிடக்கூடிய சாதனை கிடையாது மற்றும் இலங்கைக்கு எதிராக 264 ரன்கள் விளாசிய இன்னிங்சை நினைத்து பார்த்தால் அய்யோ களத்தில் இறங்கி விளாசிய பின் அவரை தடுத்து நிறுத்த முடியாது என்று மட்டும் தெரிகிறது.

Related image

மேலும் ரோகித் பேட்டிங் செய்ய அவர் வரும் போது ஒரு நாள் கிரிக்கெட் ஈசியானது போன்று எண்ணத் தோன்றும். ஆனால் அவரது ஆட்டத்தை நான் பார்க்க நான் விரும்புவேன். அவர் பந்தை எங்க எப்படி  அடிக்க விரும்புகிறாரோ? அங்கேயே பந்தை அடிக்கக் கூடிய திறமை பெற்றவர். அது வேகப்பந்தானாலும் சரி இல்லை சுழற்பந்து வீச்சாக இருந்தாலும் சரி ரோகித்விரும்பும்போது பந்தை வெகு தூரத்திற்கு விரட்டுவார் என்று கூறினார்.இந்தியா  ஆஸ்திரேலியா மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை (21-ந்தேதி) பிரிஸ்பேனில் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

author avatar
kavitha
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *