ரெடியாகிறது என்னை நோக்கி பாயும் தோட்டா! இந்த தடவையாவது ரிலீஸாகுமா?!

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இத்திரைப்படம் கடந்த இரண்டு வருடங்களாக ஷூட்டிங் முடிந்தும் கிடப்பில் போடப்பட்டிருந்தது. பிறகு இரண்டு மாதங்களுக்கு முன்னர் இதன் ஷூட்டிங் முடிந்து இந்த வருட தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

பிறகு சில பிரச்சனைகளின் காரணமாக மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது. பிறகு மீண்டும் தற்போது இதன் ரிலீஸ் வேலைகள் நடப்பதாக படக்குழுவிற்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படம் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் சென்சாருக்கு அனுப்பப்படுகிறதாம். அது முடிந்த பிறகு படம் சீக்கிரம் வெளிவந்து விடுமாம். எப்படியும் படத்தை ஜனவரி இறுதியில் படத்தை எதிர்பார்க்கலாம்.

source : cinebar.in

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment