ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு 10 கோடி குடும்பங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

மத்திய அமைச்சரவை ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கும் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்திற்கு  ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் ஆயுஷ்மன் பாரத் என்ற தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஆயுஷ்மன் பாரத் என்ற சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் மூலம் பெண்களை தலைவராக கொண்ட குடும்பத்தினர், உடல் ஊனமுற்றோர், எஸ்சி, எஸ்டி இனத்தவர், பிச்சை எடுப்போர், நிலம் மற்றும் வீடு இல்லாதவர்கள், சட்டரீதியாக விடுவிக்கப்பட்ட ஊரக பகுதியில் வசிக்கும் கொத்தடிமைகள் என 10 கோடி ஏழை குடும்பங்கள் பயன் அடைவார்கள். பாதிக்கப்படும் குடும்பத்தினர் இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.5 லட்சத்தை மருத்துவ காப்பீடாக பெற முடியும். நோயாளிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் எவ்வித ரொக்க பரிமாற்றமும் இன்றி சிகிச்சை பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment