ரூ 1_க்கு திருமணம்…சென்னையில் சந்தோச மழையில் ஜோடிகள்…!!

ரூ 1_க்கு திருமணம்…சென்னையில் சந்தோச மழையில் ஜோடிகள்…!!

தமிழகத்தில் திருமணம் செய்ய விரும்புவோரிடம் ரூபாய் 1யை கட்டணமாக பெற்றுக் கொண்டு மாதம் ஒரு ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கின்றது.
மை கிராண்ட் வெடிங் பிரைவேட் லிமிட் என்ற தனியார் நிறுவனம் புதிய முயற்சியாக செயல்படுயத்திலுள்ள இந்தத் திட்டத்தின் படி, தேர்வு செய்யப்படும் மணமகன், மணப்பெண்ணுக்குப் புத்தாடைகள், புகைப்படம் எடுத்தல், ஆல்பம் தயாரித்தல், வீடியோ ஏற்பாடு செய்தல், அலங்காரத்துடன் கூடிய கார், காலை உணவு 50 பேருக்கு, திருமண அரங்கு ஆகிய ஏற்பாடு செய்யப்படும். திருமண அரங்கு ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள வெடிங் ஸ்டீர்ட் அரங்கில் நடைபெறும்.
இது குறித்து மை கிராண்ட் வெடிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சிஇஓ சரத் அவர்கள் கூறுகையில், சமூகத்தில் மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும்,சமூகத்தில் விளிம்பு நிலையில் இருக்கும் மக்களுக்குச் சிறப்பான முறையில் மாதம்தோறும்  திருமணத்தை ஏன் நடத்தி வைக்கக்கூடாது என்று சிந்தனை தோன்றியது. அதுவும் அந்த மக்களிடம் இருந்து எந்தவிதமான பணமும் பெறாமல் இலவசமாகத் திருமணத்தை சிறப்பான முறையில் நடத்திவைக்க முடிவு செய்ய ஒரு ரூபாய் திருமணத் திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறோம் என்றார்.
இந்தத் திட்டத்தில் பயனாளிகளாக இருக்க விண்ணப்பம் செய்பவர்கள், சமூகத்தில் மிகவும் ஏழ்மை நிலையில் இருக்க வேண்டும். அது மணமகன் அல்லது மணமகள் இருவரில் ஒருவர் மாதத்துக்கு ரூ.5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை ஊதியம் பெறுபவராக இருத்தல் வேண்டும். குறிப்பாக மணமகன், மணமகள் யாராவது ஒருவர் மட்டுமே வேலைக்குச் செல்பவராக இருத்தல் வேண்டும். அப்போதுதான் திருமணத்துக்குப்பின், அவர்கள் வாழ்க்கையை நடத்திக்கொண்டு செல்ல முடியும். இதற்கு விண்ணப்பம் செய்பவர்கள் அடையாள அட்டை, முகவரி சான்றிதழ் கட்டாயம் அளிக்கவேண்டும். அதன்பின் எங்கள் நிறுவனம் சான்றிதழையும், அதில் அளிக்கப்பட்ட தகவலின் உண்மைத்தன்மையையும் ஆய்வு செய்வோம்.

சாதி, மதம் இந்தத் திருமணத்துக்கு தடையில்லை. யார் வேண்டுமானும் இந்த திருமணத் திட்டத்தில் பங்கேற்கலாம்.தமிழகத்தில் மட்டும் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டம். சரியான பயனாளிகளைக் கண்டறியும் பொருட்டு நாங்கள் விளம்பரம் செய்து வருகிறோம். விரைவில் நிறுவனம் சார்பில் குழு அமைக்கப்பட்டு விண்ணப்பங்கள் ஆய்வுசெய்து தேர்வு செய்யப்படும். முதல் திருமணம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறும். இதற்கான கட்டணம் ஒரு ரூபாய் மட்டுமே எனத் தெரிவித்தார்.
சராசரியாகச் சிறிய திருமணம் ஒன்றுக்கு 300 விருந்தினர்கள் வரலாம், கோயிலில் திருமணம் நடத்தி, அதற்கான உணவுச் செலவைச் சேர்க்கும் போது ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை இருக்கும். இதில் எதை வேண்டுமானாலும் திருமணவீட்டார் தேர்வு செய்யலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.இந்த திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
DINASUVADU 

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *