மோடிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்த காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்..!

இந்தியாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பாஜக ஏறக்குறை 344 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

இந்தியாவின் மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பிரதமர் மோடியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பல முக்கிய பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது : நாடாளுமன்ற தேர்தலில் முக சிறப்பான வெற்றியை பெற்ற நரேந்திர மோடி அவர்களுக்கும் பாஜக ஆகியோருக்கும் என்னுடைய மனம் நிறைந்த பாராட்டுக்களையும் தெரிவித்துக்குக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment